![]()
தொண்டை மண்டலத்தில் இருந்த வெங்கடாசல பல்லவராயர் என்பவர் பாண்டிய மன்னருக்கு உதவ தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கேரளசிங்கவளநாட்டில் குடியேறினர்.
வெங்கடாசல பல்லவராயரோடு தெற்கு நோக்கி வந்த தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவர் பல்லவராயர்களோடு அம்புக்கோயிலில் குடியமர்ந்தனர். தொண்டைமான்களோடு , பல்லவராயர் , காடுவெட்டி முதலிய பல்லவ மரபினரும் அம்புக்கோயிலில் குடியேறினர்.
இதுபற்றிக் குறிப்பிடும் சிவந்தெழுந்த பல்லவராயர் உலா “பாயும் பரியேறி பல்லவராயரென ராயர் பேர் பெற்ற நராதிபனும் மாயனைப்போல வாரைப்பதியழித்து பல்லழிம்பில் சூரைக்கொண்டு சூரைக்குடி கவர்ந்த துயோனும்”
என பாடுகிறது.
இப்பாடல் குறிப்பிடும் அழிம்பில் என்பது அம்புக்கோயில் என தற்காலத்தில் வழங்கப்படுகிறது. அம்புக்கோயிலானது கல்வெட்டுகளிலும் அழிம்பில் என்றே குறிப்பிடுகிறது. பல்லவராயர்களின் முன்னோர் அழிம்பில் எனும் ஊரை கைப்பற்றி அங்கு குடியேறியதை சிவந்தெழுந்த பல்லவராயன் உலா உறுதிப்படுத்துகிறது.
கிபி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வீரப்பாண்டியதேவர் கால அம்புக்கோயில் கல்வெட்டில் பல்லவராயர் அதிகாரியாக குறிப்பிடப்படுகிறார். அம்புக்கோயில் பல்லவராயர்கள் வழிவந்த மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் புதுக்கோட்டை மன்னராக பிற்காலத்தில் உயர்ந்தார். அம்புக்கோயில் பிலாவிடுதி பல்லவராயர் மரபில் வந்த திரு. விஜய ரகுநாத பல்லவராயர் கறம்பக்குடி சேர்மனாக நீண்டகாலம் பதவி வகித்து பல சமூக சேவைகளை செய்து வைத்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பல்லவராயர் அவர்களுக்கு மணி மண்டபம் அமைத்து மரியாதை செய்தார்.
ஆதார நூல்கள் : Manual of pudukkottai state/ Gazetter of pudukkottai state/ புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்
தொகுப்பு: இளையர் பெருமகன்










