![]()

தர்மபுரி மாவட்டம் மூக்கனூரில் கிடைத்த சோழன் நடுகல்
கிபி: 10 ஆம் நூற்றாண்டு
சோழனின் வலக்கரத்தில் கத்தி உள்ளது. மார்பில் அம்பு பாய்ந்துள்ளது. தலைமுடி மேலே முடியப்பட்டுள்ளது. வீரமரணம் அடைந்த சோழனை விண்ணுலகிற்கு அழைத்துச் செல்ல தேவ கன்னியர்கள் தயாராக உள்ளனர். தலைமுடி மேலே முடியப்பட்டுள்ளது.
இவ்வீரன் சோழ அரச வம்சத்தை சேர்ந்தவன் என்பதைக் குறிக்க ஸ்ரீ எனும் மங்கலச் சொல்லோடு குறிப்பிடப்படுகிறான். ” சோழ ராஜநன்” என சோழ அரசனாக குறிப்பிடப்படுகிறார்.
கிபி பத்தாம் நூற்றாண்டில் இராஷ்டிரகூடரோடு தக்கோலத்தில் நடைப்பெற்ற போரில் பூதுகன் எனும் அரசனால் கொல்லப்பட்டான்.
இந்த தகவலைக் குறிப்பிடும் திருவாலங்காடு செப்பேடு” சூரிய குலத்தின் ஆபரணமான இராஜாதித்யன் அசைக்கமுடியாத கிருஷ்ணராஜனை போர்க்களத்தில் அசைத்துவிட்டான். நாற்றிசையும் பறந்த தனது கூறிய அம்புகளால் அவன் இவ்வாறு போர் புரிந்தான். ஆனால் பெரிய மதக்களிற்றின் முதுகில் அவர் அமர்ந்து இருந்த போது பகைவனின் கூறியதோர் அம்பு இராஜாதித்யனை துளைத்துவிட்டது. மூவுலகங்களின் தலைவனான சோழன் உயர்ந்த விமானத்தில் ஏறி விண்ணவர்களின் சொர்க்கத்திற்கு சென்றான்” என குறிப்பிடுகிறது.
இராஜாதித்ய சோழனை போற்றும் நடுகல்லாகவே இந்த சோழனின் நடுகல் அமைகிறது.
நன்றி: தொல்லியல் துளிகள்

