சோழரும் இருக்கு வேளிரும் ஒரே மரபினாரா? கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசரான இடங்கழி நாயனார் ஆதித்த சோழரின் குல முதலோன்( மூத்தவன், சிறந்தவன்) என நிருவும் ஆதாரங்கள் உள்ளன. சேக்கிழார் , உமாபதி சிவாச்சாரியார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய புலவர்கள் இரு வேறு காலங்களில் வாழ்ந்தாலும் இவர்களும் ஒத்த கருத்தையே தங்களது பாடல்களில் விளக்கியுள்ளனர். நம்பியாண்டார் நம்பி (10 ஆம் நூற்றாண்டு) நம்பியாண்டார் நம்பி கிபி 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ராஜராஜசோழனின் காலத்தில் தில்லையில்…

