![]()
கிபி 1236 ஆம் ஆண்டை சேர்ந்த மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தின் கிழக்குச் சுவரில் கிடைக்கிறது. சோழர் காலத்தில் நிலவிய பொருளாதாரம் தொடர்பான நிர்வாக அமைப்பு குறித்த தகவல்களை இக்கல்வெட்டு தருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெள்ளறை எனும் பகுதியி்ல் அமைந்துள்ள புதுக்குடி எனும் ஊரைச் சேர்ந்த காணியுடைய கள்ளர்களில் பெருமான் அழகனான மணவாள முத்தரையர் என்பவர் திருவானைக் கோயிலுக்கு அளித்த கொடை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. நிறை உடையச்…


