![]()
தொண்டை மண்டலத்தில் இருந்த வெங்கடாசல பல்லவராயர் என்பவர் பாண்டிய மன்னருக்கு உதவ தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கேரளசிங்கவளநாட்டில் குடியேறினர். வெங்கடாசல பல்லவராயரோடு தெற்கு நோக்கி வந்த தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவர் பல்லவராயர்களோடு அம்புக்கோயிலில் குடியமர்ந்தனர். தொண்டைமான்களோடு , பல்லவராயர் , காடுவெட்டி முதலிய பல்லவ மரபினரும் அம்புக்கோயிலில் குடியேறினர். இதுபற்றிக் குறிப்பிடும் சிவந்தெழுந்த பல்லவராயர் உலா “பாயும் பரியேறி பல்லவராயரென ராயர் பேர் பெற்ற நராதிபனும் மாயனைப்போல வாரைப்பதியழித்து பல்லழிம்பில் சூரைக்கொண்டு சூரைக்குடி கவர்ந்த…

