![]()
திரிபுவனவீரபுரம் எனும் சிற்றூர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் சாலியமங்கலத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள சிற்றூராகும்.இவ்வூரில் திருமால் கோயிலும் பிடாரியுடன் கூடிய சிவன் கோயிலும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இங்குள்ள திருமால் கோயில் விக்ரம சோழ விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. சோழ நாட்டை கிபி 1118-1136 காலகட்டத்தில் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழனின் மகனான விக்ரம சோழனால் உருவாக்கப்பட்ட திருமால் கோயில் அமைந்துள்ள இவ்விடம் விக்ரம சோழன் பெயரால் விக்ரம சோழன் விண்ணகரம்…

