சோழரும் இருக்கு வேளிரும் ஒரே மரபினாரா?
கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசரான இடங்கழி நாயனார் ஆதித்த சோழரின் குல முதலோன்( மூத்தவன், சிறந்தவன்) என நிருவும் ஆதாரங்கள் உள்ளன. சேக்கிழார் , உமாபதி சிவாச்சாரியார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய புலவர்கள் இரு வேறு காலங்களில் வாழ்ந்தாலும் இவர்களும் ஒத்த கருத்தையே தங்களது பாடல்களில் விளக்கியுள்ளனர்.

நம்பியாண்டார் நம்பி (10 ஆம் நூற்றாண்டு)
நம்பியாண்டார் நம்பி கிபி 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ராஜராஜசோழனின் காலத்தில் தில்லையில் பல பழைய நூல்களை தொகுத்து வெளியிட பெருமுயற்சி செய்தவர்.இவர் தன்னுடைய பாடலில்” ஆதித்தன் குல முதலோன், இருக்குவேள் மன்ன இடங்கழியே” என குறிப்பிட்டுள்ளார். அதாவது கொங்கில் இருந்து தங்கத்தை கொண்டு வந்து தில்லை கோயிலுக்கு பொன் வேய்ந்த ஆதித்த சோழன் குலத்தில்( இனத்தில்) முதலோன்( உயர்ந்தவன், பெரியோன்) என பாராட்டி உள்ளார்..அதித்த சோழனும் இடங்கழியாரும் ஒரு குலம்( கள்ளமறவர்) குலம் என கூறுகிறார்.

சேக்கிழார்(12 ஆம் நூற்றாண்டு)
சேக்கிழார் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருத்தொண்டர் புராணம் பக்(51) ல் இவர் ியற்றிய பாடல் வரிகளில்”இருக்குவேள் இடங்கழியார் பொன் வேய்ந்த ஆதித்தன் மரபோர்” என குறிப்பிடுகிறார். இருக்குவேளிர் ஆதித்த சோழனின் மரபினர்( கள்ளர் மரபினர்) என பாடுகிறார்.
உமாபதி சிவாச்சாரியார்(14 ஆம் நூற்றாண்டு)
கிபி 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய ” திருத்தொண்டர் புராணம் சாரம்(59) ” எனும் நூலில் இருக்குவேளிர் இடங்கழியார் ஆதித்த சோழன் மரபினர் என குறிக்கின்றார்.
இருக்குவேளிர் எந்த குலத்தவர்.?

- இருக்குவேளிர் மரபினர் ” கள்ளர்” குலத்தவர் என இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட ” The cholas” எனும் புத்தகத்தில் நீலகண்ட சாஸ்திரியார் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
- கொடும்பாளூர் கல்லன் ஆதித்தபடாரி, கள்ளன் அச்சப்பிடாரி( க.வெ 140-1928, Sii vol 7 522) என வேளிர் குலத்து அரசிகள் குறிக்கப்படுகிறார்கள்.
- கொடும்பாளுர் அரசர் மறவன் பூதியார் எனவும் குறிக்கப்படுகிறார்.
*கள்ளரே வேளிர் என கூறும் The cholas vol 1 (1935)neelakanda sastri, published by university of madras , madras presedency

இருக்குவேளிரும் சோழரும் ஒரே குலத்தினர்( இந்திய தொல்லியல் துறை)

- சோழரும் கொடும்பாளூர் வேளிரும் ஒரே இனம் என கூறும் Ephigraphica indica vol 30(p246), Archaeological survey of india.மூலம் தெளிவாக விளக்கியுள்ளனர்.
இருக்கு வேளிரும், சோழரும் ஒரே குலத்தவர் என இலக்கிய சான்றுகளின் மூலம் இந்திய தொல்லியல் துறை விளக்கியுள்ளனர். இருக்கு வேளிர்கள் கள்ளர் என்று இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட ” The cholas ” மூலம் 1930 லேயே நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: இளையர் பெருமகன்

