![]()
கிபி 1236 ஆம் ஆண்டை சேர்ந்த மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தின் கிழக்குச் சுவரில் கிடைக்கிறது.
சோழர் காலத்தில் நிலவிய பொருளாதாரம் தொடர்பான நிர்வாக அமைப்பு குறித்த தகவல்களை இக்கல்வெட்டு தருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெள்ளறை எனும் பகுதியி்ல் அமைந்துள்ள புதுக்குடி எனும் ஊரைச் சேர்ந்த காணியுடைய கள்ளர்களில் பெருமான் அழகனான மணவாள முத்தரையர் என்பவர் திருவானைக் கோயிலுக்கு அளித்த கொடை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
நிறை உடையச் சோழப்பெரையன் , ராஜ ராஜ நாடாள்வான், பெரியான் நாராயணன், அம்பாலவன் பொன்னம்பல நாடாள்வான் , ஆதி சோழபாண்டியரையன், விதிவிடங்க நாடாள்வான் முதலியோரின் நிலத்தை 4000 காசுகள் கொடுத்து பெற்ற கள்ளர் குல பெருமான் அழகன் அவற்றை கோயிலுக்கு கொடையாக கொடுத்து கிழிபுணைத்தீட்டு எனும் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
இக்கொடைக்கு சாட்சியாக சத்திவனப்பெருமாள், பொற்கோயில் நம்பி, ஆலங்குடையான் மீன்வன் பல்லவரையன், விளாநாட்டு வேளார், கீழாற்றூர் அரையன் முதலியோர் இருந்துள்ளனர்.

“காணியுடைய கள்ளரில் பெருமான் அழகனான மணவாள முத்தரையன் ” எனக் குறிப்பிட்டதன் மூலம் திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் கள்ளர்கள் காணி உரிமை எனும் நிலவுடைமையாளர்களாக சோழர் காலத்தில் விளங்கியதை உணர்த்துகிறது.
( கல்வெட்டு 499A of 1905)
இளையர் பெருமகன்

